7 பேர் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட கவர்னர் உத்தரவிடக்கோரி நளினி வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு


7 பேர் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட கவர்னர் உத்தரவிடக்கோரி நளினி வழக்கு ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 9 July 2019 6:02 AM IST (Updated: 9 July 2019 6:02 AM IST)
t-max-icont-min-icon

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது.

சென்னை,

பின்னர், அது கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திடவில்லை.

இந்தநிலையில், நளினி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது இதுவரை கவர்னர் கையெழுத்திடவில்லை. எனவே, கையெழுத்திட கவர்னருக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவர்னரை எதிர்மனுதாரராக சேர்த்து தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் வாதிட்டார். இதையடுத்து, விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story