சட்டசபையில் இன்று...
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டமும் காலை, மாலை என இருவேளைகளில் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.
கேள்வி நேரம் முடிந்ததும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா பதில் அளித்து பேசுகிறார். தனது துறை சார்ந்த அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.
மாலை 4.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் எம்.மணிகண்டன் ஆகியோர் பதில் அளிக்கிறார்கள். இறுதியாக தங்களது துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகின்றனர்.

Related Tags :
Next Story