தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி


தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் - முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 10 July 2019 12:57 PM IST (Updated: 10 July 2019 12:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

சட்டப்பேரவையில்  விதி 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

* தமிழகத்தில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே 13 அரசு சட்டக்கல்லூரிகள், ஒரு தனியார் சட்டக்கல்லூரி செயல்படுகிறது. இந்நிலையில் மேலும் 3 அரசு சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படும்.

*  5 ஆயிரம் கி.மீ ஊரக சாலைகள் ரூ.1200 கோடி செலவில் மேம்படுத்தப்படும்

* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12,500 கோடி கடன் வழங்கப்படும்.

* தண்ணீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்துவதற்காக தமிழகத்தில் ரூ. 318 கோடியில் 10 ஆயிரம் தடுப்பணைகள் புதிதாக கட்டப்படும் என கூறினார்.

Next Story