குரூப்-4 பணிகளுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பம் 14-ந்தேதி கடைசி நாள்
குரூப்-4 பணிகளுக்கு இதுவரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், விண்ணப்பிக்க வருகிற 14-ந்தேதி கடைசி நாள் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.
சென்னை,
குரூப்-4 பணிகளுக்கு இதுவரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், விண்ணப்பிக்க வருகிற 14-ந்தேதி கடைசி நாள் என்றும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது.
10 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 6,491 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (குரூப்-4) தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 14-ந்தேதி கடைசி நாள் ஆகும். வருகிற 16-ந்தேதி வரை தேர்வுக்கட்டணம் செலுத்தலாம். நேற்று மாலை வரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து இருக்கின்றனர்.
கடைசி நாளில் விண்ணப்பிக்க வரும் விண்ணப்பதாரர்களை கருத்தில் கொண்டு தேவையான எண்ணிக்கையிலான ‘கம்ப்யூட்டர் சர்வர்கள்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தேவையான அளவு ‘இன்டெர்நெட்’ அலைவரிசையும் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாளுக்கும் (14.07.2019) தேர்வு நாளுக்கும் (செப்டம்பர் 1-ந்தேதி) இடையே மிகக்குறைந்த நாட்களே இருப்பதால், விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதியை எக்காரணம் கொண்டும் நீட்டிக்க இயலாது. எனவே விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல், உடனடியாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணபரிமாற்ற விவகாரம்
விண்ணப்பதாரர்கள் அவர்களின் பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியன மறந்துவிட்டால் அதனை மிகவும் எளிமையாக மீட்டெடுக்க www.tnps-c-ex-ams.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பதிவுக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அவர்களின் பணப்பரிமாற்ற விவரத்தினை விண்ணப்பம் செலுத்தும் பக்கத்தில் உள்ள ‘VI-EW PR-E-V-I-O-US PA-Y-M-E-NT’ என்ற இணைப்பினை கிளிக் செய்து பணப்பரிமாற்றம் நிறைவடைந்துவிட்டதா? அல்லது தோல்வியடைந்துவிட்டதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பணப்பரிமாற்றம் தோல்வியடைந்துவிட்டால் அவர்கள் பணம் செலுத்துவதற்கான கடைசி நாளுக்குள் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
மாற்ற முடியாது
குரூப்-4-க்கு விண்ணப்பத்தினை பதிவுசெய்து இறுதியாக சமர்ப்பித்து அதற்கான விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டிருந்தால் மட்டுமே அது முழுமைபெற்ற விண்ணப்பமாக கருதப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலைகுறித்த விவரங்களை அவர்களின் தன்பதிவுப்பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப விவரங்களை விண்ணப்பம் இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர் வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டுவிட்ட பின்னர், அதில் உள்ள விவரங்களை மாற்ற முடியாது. இது தொடர்பாக பெறப்படும் மின்னஞ்சல் மற்றும் மனுக்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது.
விவரங்கள் அறியலாம்
பயனாளர் குறியீடு, கடவுச்சொல், புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம், நிரந்தரப்பதிவு தொடர்பான பிரச்சினைகள், நடப்பு தேர்வு விண்ணப்பம் குறித்த தகவல்கள், பதிவுக்கட்டணம் அல்லது தேர்வுக்கட்டணம் செலுத்துவது தொடர்பான கேள்விகளுக்கு காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களான 044-25300336, 25300337, 25300338, 25300339 ஆகிய தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் அல்லது he-l-p-d-esk@tnps-c-ex-ams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கைகளை உரிய விவரங்களுடன் அனுப்பலாம்.
இதர பொதுவான கேள்விகள் மற்றும் தகவல்களுக்கு 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது co-nt-a-ctt-n-psc@gm-a-il.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொண்டோ விவரங்களை அறியலாம்.
மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story