காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க அதிகாலை 3 மணிக்கே குவிந்த பக்தர்கள்


காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க அதிகாலை 3 மணிக்கே குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 11 July 2019 3:05 AM IST (Updated: 11 July 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க அதிகாலை 3 மணிக்கே பக்தர்கள் குவிந்தனர்.

காஞ்சீபுரம்,

புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். 10-வது நாளான நேற்று அத்திவரதர் ரோஜா நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று அதிகாலை 4½ மணிக்கே அத்திவரதரை தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து அத்திவரதரை தரிசிக்க நேற்று அதிகாலை 3 மணி முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அத்திவரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்களுக்கு முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஜனாதிபதி வருகை

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை (வெள்ளிக் கிழமை) அத்திவரதரை தரிசனம் செய்ய வருகை தருகிறார். இதையொட்டி காஞ்சீபுரம் நசரத்பேட்டையில் உள்ள ஹெலிகாப்டர் தளம் அருகே நேற்று காலை 12 மணியளவில், ஹெலிகாப்டர் ஒத்திகை காட்சியாக 57 முறை சுற்றி வந்தது. மேலும் அங்கிருந்து கோவிலுக்கு செல்லும் பாதைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று பிற்பகல் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று அத்திவரதரை தரிசித்தார். அப்போது விஜயேந்திரர் வழங்கிய பலவகையான பழங்கள், வண்ண வண்ண மலர் மாலைகளை தட்டில் வைத்து அத்திவரதருக்கு அர்ச்சகர்கள் வைத்தனர்.

Next Story