‘வரும்... ஆனா வராது...’ தமிழக சட்டசபையில் இன்றும் சிரிப்பலை
‘வரும்... ஆனா வராது...’ என மு.க.ஸ்டாலின் கூறியதால் தமிழக சட்டசபையில் இன்றும் சிரிப்பலை எழுந்தது.
சென்னை,
தமிழகத்தில் நிச்சயம் மு.க.ஸ்டாலின் மாற்றத்தை கொண்டு வருவார் என தமிழக சட்டசபையில் சேகர் பாபு நேற்று பேசியபோது, அமைச்சர் ஜெயக்குமார் ‘வரும் ஆனா வராது’ என கூறியபோது சிரிப்பலை ஏற்பட்டது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்கள் தமிழகத்தில் விரைவில் தொழில் தொடங்க வரும் என அமைச்சர் சம்பத் கூறினார்.
அமைச்சர் சம்பத் பேச்சை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘வரும் ஆனா வராது’ என்று அதுபோல் கூறியதால் சட்டப்பேரவையில் இன்றும் சிரிப்பலை எழுந்தது.
Related Tags :
Next Story