பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - தமிழக அரசு


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது - தமிழக அரசு
x
தினத்தந்தி 12 July 2019 12:55 PM IST (Updated: 12 July 2019 12:55 PM IST)
t-max-icont-min-icon

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தமிழக அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

சென்னை,

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் அனுப்பியும் கவர்னர் முடிவெடுக்கவில்லை என நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில்  இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட நளினி தரப்பு, 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறக்குமாறு கவர்னருக்கு  உத்தரவிட வேண்டும் என கோரியது.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்தார். மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர்  சட்ட ஆலோசனை செய்து வருவதாக கூறினார். 

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னருக்கு  உத்தரவிட கோரிய வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த உத்தரவு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

Next Story