ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.2 கோடியை கொள்ளையடித்த 7 பேருக்கு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.2 கோடியை கொள்ளையடித்த 7 பேருக்கு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 1 Aug 2019 5:00 AM IST (Updated: 1 Aug 2019 5:00 AM IST)
t-max-icont-min-icon

ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.2 கோடியை கொள்ளையடித்த 7 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.2 கோடியை கொள்ளையடித்த 7 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பணம் கொள்ளை

மும்பை கமலா மில் பகுதியில் இருந்து தானே மாவட்டம் மிராரோட்டில் உள்ள ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு ரூ.2 கோடியுடன் பாதுகாப்பு நிறுவன வேன் சென்றது. இதில் பாதுகாவலர்களாக தர்மேஷ் மற்றும் சாத்ரி அலம்கான் ஆகியோர் சென்றனர்.

வேன் வில்லேபார்லே பகுதியில் சென்ற போது சாத்ரி அலம்கான் டீ குடிக்க சென்றார். பின்னர் வேனில் இருந்தவர்களுக்கும் டீ வாங்கி வந்தார். டீயை குடித்த சிறிது நேரத்தில் சாத்ரி அலம்கானை தவிர மற்ற அனைவரும் வேனில் மயங்கி விழுந்தனர்.

அப்போது காரில் வந்த ஒரு கும்பல் சாத்ரி அலம்கான் உதவியுடன் வேனில் இருந்த ரூ.1 கோடியே 95 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது.

தலா 7 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாத்ரி அலம்கான், தரிக்கான், முனேஷ்வர், முகமது சபி, குர்சித் ஷேக், முக்தர் ஷேக் மற்றும் மன்சூர் ஷேக் ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் 7 பேர் மீதும் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு, 7 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Next Story