ரிசர்வ் வங்கி பிராந்திய இயக்குனராக எஸ்.எம்.என்.சுவாமி பொறுப்பு ஏற்பு
ரிசர்வ் வங்கி பிராந்திய இயக்குனராக எஸ்.எம்.என்.சுவாமி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
சென்னை,
சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பிராந்திய இயக்குனராக (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) எஸ்.எம்.என்.சுவாமி பொறுப்பேற்று உள்ளார். இதற்கு முன்பு, திருவனந்தபுரத்தில் பிராந்திய இயக்குனராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் வர்த்தகப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்ற இவர், 1990–ம் ஆண்டு நேரடி அதிகாரியாக ரிசர்வ் வங்கியில் பணியில் சேர்ந்தார். பின்னர் பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத், மும்பை அலுவலகங்களில் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
எஸ்.எம்.என்.சுவாமி, ரூபாய் நோட்டு நிர்வாகம், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களைக் கண்காணிப்பது, மும்பை ரிசர்வ் வங்கி மைய அலுவலகத்தில் வங்கி கண்காணிப்பு போன்ற பல பிரிவுகளில் நீண்ட கால அனுபவம் உடையவர். இவர் வெளிநாடுகளில் நடைபெற்ற சர்வதேச வங்கி கருத்தரங்குகளிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவல் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story