பந்து என நினைத்து விளையாடியபோது வெடிபொருள் வெடித்து 2 மாணவர்களின் விரல்கள் துண்டானது


பந்து என நினைத்து விளையாடியபோது வெடிபொருள் வெடித்து 2 மாணவர்களின் விரல்கள் துண்டானது
x
தினத்தந்தி 3 Aug 2019 4:15 AM IST (Updated: 3 Aug 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி உணவு இடைவேளையின் போது பள்ளியின் அருகே உள்ள கண்மாய் பகுதிக்குயில் கிடந்த பந்து போன்ற பொருளை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர்.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி தியாகராஜா அரசு மேல்நிலைப்பள்ளியில் மாதவன் (வயது 13), வெங்கடேசன் என்ற 2 மாணவர்கள் 8-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் நேற்று பள்ளி உணவு இடைவேளையின் போது பள்ளியின் அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றனர். அவர்கள், அங்கு கிடந்த பந்து போன்ற பொருளை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றனர்.

பின்னர் பள்ளியின் மொட்டை மாடிக்கு சென்று அதை தூக்கிப்போட்டு விளையாடினர். அப்போது அந்த பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், 2 மாணவர்களின் கை விரல்கள் துண்டாகியும், சிதைந்தும் கையில் இருந்து ரத்தம் வழிந்த நிலையிலும் கீழே விழுந்து கிடந்தனர். சத்தம் கேட்டு வந்த ஆசிரியர்கள் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்து பூலாங்குறிச்சி போலீசார் நடத்திய விசாரணையில், வெடித்து சிதறியது பாறை உடைக்க பயன்படுத்தும் வெடிமருந்து என்பது தெரியவந்தது.

Next Story