சென்னை ஐ.ஐ.டி.க்கு சிறந்த நிறுவனத்துக்கான அங்கீகாரம் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களின் தரத்தை காட்டும் வகையில் சிறந்த நிறுவனத்துக்கான அங்கீகாரத்தை (இன்ஸ்டிடியூசன் ஆப் எமினன்ஸ்) கடந்த ஆண்டு (2018) அறிமுகம் செய்தது.
சென்னை,
கடந்த ஆண்டு பெங்களூரு ஐ.ஐ.எஸ்., டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்பட சில கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த நிறுவனங்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் இதில் சென்னை ஐ.ஐ.டி. கல்லூரிக்கு அங்கீகாரம் அளிக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதற்கு கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டில் சிறந்த நிறுவனத்துக்கான அங்கீகாரத்தை பெறும் நிறுவனங்களின் பெயரை பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்து இருக்கிறது. அதில் டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம், ஐதராபாத் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. சென்னை மற்றும் காரக்பூர் ஆகிய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும், ஜமியா ஹம்டார்டு பல்கலைக்கழகம், ஓ.பி. ஜிந்தால் குளோபல் பல்கலைக்கழகம், ஷிவ்நாடார் பல்கலைக்கழகத்துக்கும் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்து இருக்கிறது. இந்தியாவின் சிறந்த என்ஜினீயரிங் கல்லூரிக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை சென்னை ஐ.ஐ.டி. கடந்த 4 ஆண்டுகளாக தக்க வைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது சிறந்த நிறுவனத்துக்கான அங்கீகாரமும் சென்னை ஐ.ஐ.டி.க்கு கிடைத்து இருப்பதன் மூலம் அந்த கல்வி நிறுவனம் கூடுதல் மதிப்பை பெற்று இருக்கிறது.

Related Tags :
Next Story