சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.75.34க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாதமிருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து விற்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.
இதன்பின் இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே சென்றது. இதில், பெட்ரோல் விலை ரூ.85க்கும் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன்பின் பெட்ரோல் விலை சற்று குறைய தொடங்கியது.
இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.75.34 ஆகவும், டீசல் விலை 7 காசுகள் குறைந்து ரூ.69.64 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story