வேலூர் மக்களவை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
வேலூர் மக்களவை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
வேலூர்,
தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிடுகிறார்கள். பல வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் ஏ.சி.சண்முகத்துக்கும், கதிர் ஆனந்துக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
வேலூர் மக்களவை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் மந்தமாக இருந்த வாக்குபதிவு மதியத்திற்கு பின் விறுவிறுப்படைந்தது. 6 மணிக்கு முன்னதாக வந்த வாக்காளருக்கு டோக்கன்கள் வழக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை 9-ந்தேதி நடக்கிறது.
Related Tags :
Next Story