கருணாநிதி கட்டி எழுப்பிய நினைவு சின்னம் தமிழகம் - வைரமுத்து புகழாரம்


கருணாநிதி கட்டி எழுப்பிய நினைவு சின்னம் தமிழகம் - வைரமுத்து புகழாரம்
x
தினத்தந்தி 7 Aug 2019 7:08 PM IST (Updated: 7 Aug 2019 7:08 PM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி கட்டி எழுப்பிய நினைவு சின்னம் தமிழகம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து பேசியதாவது, 

அமேசான் நதி மட்டும் கடலுக்குள் நன்னீராக பயணிக்கும், அதுபோல் கருணாநிதி பயணிக்கிறார். கருணாநிதி தத்துவ உடம்பாக மாறி இருக்கிறார். கலைஞர் தன் தத்துவங்களால் இன்னும் வாழ்ந்து வருகிறார். 

கருணாநிதியின் அன்பு கண்ணைவிட்டு மறையவில்லை. கருணாநிதி மத விரோதி கிடையாது, மதத்தின் பெயரால் மனிதர்களை பிரிப்பதை எதிர்த்தவர். சேலம் உருக்காலையை கொண்டு வந்தவர் கருணாநிதி. கருணாநிதி கட்டி எழுப்பிய நினைவு சின்னம் தமிழகம் .

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story