தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 82 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அவலாஞ்சியில் 82 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறித்து ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தி உறுதிப்படுத்தி உள்ளார். அடுத்த 3 நாட்களுக்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story