ஸ்டாலின் உருவாக்கிய அற்புதமான கூட்டணியை வைகோ உடைத்துவிடக்கூடாது - கே.எஸ். அழகிரி


ஸ்டாலின் உருவாக்கிய அற்புதமான கூட்டணியை வைகோ உடைத்துவிடக்கூடாது - கே.எஸ். அழகிரி
x
தினத்தந்தி 8 Aug 2019 5:52 PM IST (Updated: 8 Aug 2019 5:52 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டாலின் உருவாக்கிய அற்புதமான கூட்டணியை வைகோ உடைத்துவிடக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

சென்னை

சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதாவது:-

வைகோ மீதும் அவருடைய பேச்சின் மீதும் எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு. வைகோ தமிழரே இல்லை என சீமான் கூறியபோது தடுத்தவன் நான்.

காஷ்மீர் மசோதா மீதான விவாதத்தில் காஷ்மீர் பற்றி பேசாமல் காங்கிரஸ் குறித்து வைகோ பேசியது ஏன்?. மோடி, அமித்ஷாவை மகிழ்ச்சியடைய செய்வதற்காகவே காங்கிரஸை வைகோ விமர்சிக்கிறார். 

வைகோவை எம்.பி. ஆக்கினால் 8 பேரும் ஆதரவளிக்க மாட்டோம் என நாங்கள் கூறியிருந்தால் வைகோவை ஸ்டாலின் எம்பியாக்கி இருப்பாரா?. எங்களின் மறைமுக வாக்கால் தான் வைகோ எம்.பி. ஆனார். நேருவால் தான் இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்தது.

நேருவை புகழாமல், மோடியை புகழ்ந்து பேசுகிறார் வைகோ.  காஷ்மீர் விவகாரத்தில் நேருவும், காங்கிரசும் என்ன தவறு செய்தது என வைகோ கூறினால், நான் பதிலளிக்க தயாராக உள்ளேன். ஸ்டாலின் உருவாக்கிய அற்புதமான கூட்டணியை வைகோ உடைத்துவிடக்கூடாது என கூறினார்.

Next Story