இரா.அன்பரசு மரணம்: கே.எஸ்.அழகிரி இரங்கல்
இரா.அன்பரசு மறைவிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
இளமைப்பருவம் முதலே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, பல்வேறு பொறுப்புகளை ஏற்று, 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றிய இரா.அன்பரசுவின் மறைவு செய்தி கேட்டு, அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டவர். பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகநீதி பெறுவதற்காக தமது வாழ்நாள் முழுவதும் கடுமையாக உழைத்தவர்.
அவரது மறைவு காங்கிரஸ் இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story