சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக ராஜேந்திரன் நியமனம் பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு
முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனோடு தொடர்புடைய பதவிகளில் பணிபுரிபவர்கள் நிர்வாக நலன் கருதி, பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது.
சென்னை,
முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனோடு தொடர்புடைய பதவிகளில் பணிபுரிபவர்கள் நிர்வாக நலன் கருதி, பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலராக இருந்த ராஜேந்திரன், சென்னை மாவட்டத்துக்கும், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.திருவளர்செல்வி, திருவள்ளூர் மாவட்டத்துக்கும் இடமாறுதல் செய்யப்படுகின்றனர்.
தொடக்கக்கல்வி இயக்ககத்தின் துணை இயக்குனர் (சட்டம்) ஆர்.பூபதி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.செந்திவேல்முருகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனராகவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குனர் எஸ்.முருகேசன், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயலாளராகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.மணிவண்ணன், திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும், நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் எம்.வேதரத்தினம், தொடக்கக்கல்வி இயக்ககத்தின் துணை இயக்குனராகவும் (சட்டம்), திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் எம்.ராமன், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று நியமனம் செய்யப்படுகின்றனர்.
மேற்கண்ட தகவல் பள்ளிக்கல்வி துறையின் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story