தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 உயர்வு


தங்கம் விலை பவுனுக்கு ரூ.88 உயர்வு
x
தினத்தந்தி 10 Aug 2019 4:17 AM IST (Updated: 10 Aug 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் பவுனுக்கு ரூ.88-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 569-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 552-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னை, ஆக.10-

தங்கம் விலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த 2-ந் தேதி ஒரு பவுன் ரூ.27 ஆயிரத்தை தாண்டிய நிலையில், கடந்த 7-ந் தேதி ரூ.28 ஆயிரத்தையும் கடந்தது.

இந்தநிலையில் நேற்றும் அதன் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 558-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 464-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.11-ம், பவுனுக்கு ரூ.88-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 569-க்கும், ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 552-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 3 நாட்களாக அதிகரித்து வந்த வெள்ளி விலை நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு 10 காசும், கிலோவுக்கு ரூ.100-ம் குறைந்து, ஒரு கிராம் 47 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.47 ஆயிரத்து 500-க்கும் விற்பனை ஆனது.

Next Story