உரிய பாஸ் இல்லாமல் அனுமதி அத்திவரதர் கோவிலில் காவல் பணியில் இருந்த இன்ஸ்பெக்டருக்கு திட்டு


உரிய பாஸ் இல்லாமல் அனுமதி அத்திவரதர் கோவிலில் காவல் பணியில் இருந்த இன்ஸ்பெக்டருக்கு திட்டு
x
தினத்தந்தி 10 Aug 2019 3:33 PM IST (Updated: 10 Aug 2019 3:33 PM IST)
t-max-icont-min-icon

உரிய பாஸ் இல்லாமல் விஜபி அனுமதி அத்திவரதர் கோவிலில் காவல் பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை திட்டிய மாவட்ட ஆட்சியர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் அத்திவரதர் வைபவம் முக்கிய பிரமுகர்கள் வரும் வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் அனைவர் முன்னிலையிலும் கடிந்து கொண்டார்.

காவல்துறையினர் உரிய பாஸ் இல்லாமல் உள்ளே அனுமதித்து வருவதால், விஐபி வரிசை தினந்தோறும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. பொதுமக்கள், பக்தர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இதைப்பற்றி புகாராக கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பொன்னையா, பலரிடமும் விஐபி பாஸ் இல்லாதது தெரிய வந்ததும் அவர்களை அனுமதித்த காவல் ஆய்வாளரை கடிந்து கொண்டார். ஆய்வாளரை பற்றி வாய்மொழியாக புகார் அளித்து அவரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி ஆட்சியர் முறையிட்டார்.

Next Story