மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை (ஆக. 11) சென்னை வருகிறார்.
சென்னை,
குடியரசுத் துணைத் தலை வராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் வெங்கையா நாயுடு ஆற்றிய பணிகள், உரைகள், சந்திப்புகள், முக்கிய நிகழ்வுகள் ‘லிசனிங், லேர்னிங் அண்டு லீடிங்' (கேட்டல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தொகுக் கப்பட்டுள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழா சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகையையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story