தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜனுக்கு கனிமொழி எம்.பி.,வாழ்த்து


தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜனுக்கு கனிமொழி எம்.பி.,வாழ்த்து
x
தினத்தந்தி 1 Sept 2019 7:25 PM IST (Updated: 1 Sept 2019 7:25 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜனுக்கு கனிமொழி எம்.பி.,வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

இந்நிலையில் தூத்துக்குடி திமுக எம்.பி.,யான கனிமொழி  தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை சவுந்திரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் திருமிகு.தமிழிசை சவுந்திரராஜன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். அம்மாநில மக்களுக்காக அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story