ரஜினி கட்சி ஆரம்பித்தால் யாருக்கு பாதிப்பு: அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்
ரஜினி கட்சி ஆரம்பித்தால் யாருக்கு பாதிப்பு என்று சொல்ல முடியாது, அவர் கட்சி ஆரம்பிக்கட்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
திருச்சி,
திருச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ரஜினி சிறந்த நடிகர், நல்ல மனிதர், மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசக் கூடியவர். ரஜினி கட்சி ஆரம்பித்தால் யாருக்கு பாதிப்பு என்று சொல்ல முடியாது, முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தால் தமிழக மக்களுக்கு கடுகளவும் பாதிப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story