ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வு: ஆங்கிலம், இந்தியில் மட்டுமே என்ற அறிவிப்பு கண்டிக்கத்தக்கது - மு.க.ஸ்டாலின்
ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தினால் போதும் என்ற ரெயில்வேயின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரெயில்வே ஊழியர்களுக்கான தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தினால் போதும் என்ற ரெயில்வேயின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. கேள்வித்தால் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என உரிமை கோர முடியாது என அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ரெயில்வேயின் இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. தபால் தேர்வை தமிழில் நடத்த முடியும் என்கிறபோது ரெயில்வே தேர்வுகளை தமிழில் ஏன் நடத்த முடியாது?
தமிழ்மொழியை புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரெயில்வே வாரியம் வம்படியாக ஈடுபட வேண்டாம். ரெயில்வேயில் தமிழ் மொழியை புறக்கணித்து மீண்டும் மொழி போராட்டத்திற்கான களம் அமைத்து தர வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story