மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு: 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Sept 2019 7:59 PM IST (Updated: 6 Sept 2019 7:59 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம்,

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால் காவேரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை  முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.6 அடியை எட்டியதை தொடர்ந்து அணையில் உள்ள 16 கன் மதகு வழியாக உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக  தெரிவித்துள்ளது.

அதனால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தியது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக
உயர்ந்துள்ளதைதொடர்ந்து  சேலம் மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியே இரவு 9 மணி முதல் 2,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது. 

40ஆவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் உபரி நீர் திறக்கப்படவுள்ளது.

Next Story