‘காவிரி கூக்குரல்’ இயக்கத்துக்கு திரட்டப்படும் நிதியை: ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய 9 பேர் குழு நிர்வகிக்கும் ஈஷா அறக்கட்டளை அறிவிப்பு
காவிரி கூக்குரல் இயக்கத்துக்கு திரட்டப்படும் நிதியை ஓய்வுபெற்ற நீதிபதி அடங்கிய 9 பேர் குழு நிர்வகிக்கும் என்று ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
சென்னை,
ஈஷா அறக்கட்டளை சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் காவிரி நதிக்கு புத்துயிரூட்டவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கோடிக்கணக்கில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்து ஒரு மரக்கன்றுக்கு ரூ.42 என்ற முறையில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு பெறப்படும் கோடிக்கணக்கான நிதியை ஈஷா அறக்கட்டளை நிர்வகிக்க போவது இல்லை.
ஓய்வுபெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி அரிஜித் பஷயத், பிரபல பெண் தொழில் அதிபர் கிரண் மசூம்தார் ஷா, உலக வன உயிர் நிதியத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரி ரவி சிங், மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு துறையின் முன்னாள் செயலாளர் சசி சேகர், மத்திய வேளாண் துறையின் கீழ் இயங்கும் சிறு விவசாயிகள் வேளாண் வர்த்தக அமைப்பின் முன்னாள் மேலாண் இயக்குநர் பிரவேஷ் சர்மா, ‘டாடா ஸ்டீல்’ நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவர் பி.முத்துராமன்;
‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார், கர்நாடக அரசின் முன்னாள் கூடுதல் தலைமை செயலர் டி.என்.நரசிம்ம ராஜூ, இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் இயக்குநர் சந்திரஜித் பானர்ஜி ஆகிய 9 பேர் அடங்கிய குழு தான் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் நிதிகளை நிர்வகிக்க உள்ளது.
மேலும், வரவு செலவுக் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக மதிப்புமிக்க ஒரு தணிக்கை குழுவும் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே, வேளாண் காடு முறைக்கு மாறும் விவசாயிகளுக்கு முதல் 4 ஆண்டுகள் மானியம் வழங்க இரு மாநில அரசுகள் கொள்கை அள வில் சம்மதம் தெரிவித்துள்ளன.
காவிரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரத்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரங்கள் வளர்க்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story