ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹில் ரமானியை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து சமரசம்
ராஜினாமா கடிதம் அளித்த தலைமை நீதிபதி தஹில் ரமானியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து சமரசம் செய்ததாக கூறப்படுகிறது.
சென்னை,
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று பணிக்கு வரவில்லை. தஹில் ரமானி தலைமையிலான முதல் அமர்விற்கு இன்று 75 வழக்குகள் பட்டியலிடப்பட்டு இருந்தன.
தஹில் ரமானி வராத காரணத்தினால் 75 வழக்குகளும் 2வது அமர்வில் பட்டியலிடப்பட்டு உள்ளன. தஹில் ரமானி அமர்வின் வழக்குகளை நீதிபதி அக்னிஹோத்ரி அமர்வு விசாரிக்கிறது.
மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, தஹில் ரமானி ராஜினாமா கடிதம் அளித்திருந்தார் . ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமானியை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். பதவியில் இருந்து விலகும் முடிவை கைவிட வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story