சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணிமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணிமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 9 Sept 2019 12:02 PM IST (Updated: 9 Sept 2019 3:13 PM IST)
t-max-icont-min-icon

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணிமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் முடிவு செய்து உள்ளன.

சென்னை,

மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் அதிருப்தியில் இருந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி தனது ராஜினாமாவை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். இது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி இன்று பணிக்கு வரவில்லை. 

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி பணிமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் முடிவு செய்து உள்ளன. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்த இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story