ரெயில்வே தேர்வை தமிழில் எழுதலாம்- ரெயில்வே வாரியம் அறிவிப்பு


ரெயில்வே தேர்வை தமிழில் எழுதலாம்- ரெயில்வே வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Sept 2019 9:58 PM IST (Updated: 9 Sept 2019 9:58 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ. தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

ரெயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ. தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்ற அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பல கட்சி தலைவர்கள் ரெயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதனை அடுத்து, ரெயில்வே வாரியம் ரெயில்வே துறை சார்ந்த ஜி.டி.சி.இ. தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில்  எழுதலாம் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டது.

இதுகுறித்து ரெயில்வே வாரியம் அனைத்து மண்டல ரெயில்வே மேலாளர்களுக்கும் விளக்க கடிதம் அனுப்பியுள்ளது.

Next Story