விக்ரம் லேண்டருடன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டு விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி பெற சந்திரன் கோவிலில் சிறப்பு பூஜை
விக்ரம் லேண்டருன் மீண்டும் தொடர்பு ஏற்பட்டு விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி பெற திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்துள்ள திங்களூர் சந்திரன் கோவிலில் கடந்த 6-ந் தேதி ‘சந்திரயான்-2’ வெற்றிகரமாக நிலவை அடையவும், திட்டமிட்டபடி ஆய்வுகள் மேற்கொள்ளவும் தடைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க சிறப்பு பூஜைகள் நடந்தது.
இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விக்ரம் லேண்டரில் இருந்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது. இதனால் ‘சந்திரயான்-2’ திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் நிலவில் தரை இறங்கும்போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொள்வதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து விஞ்ஞானிகளின் முயற்சியால் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்பட்டு ‘சந்திரயான்-2’ திட்டம் வெற்றி அடைய நேற்று திங்களுர் சந்திரன் கோவிலில் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சந்திரபகவானுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

Related Tags :
Next Story