ஆகஸ்ட் மாதம் வரை மெட்ரோ ரெயிலில் 1.91 கோடி பேர் பயணம்


ஆகஸ்ட் மாதம் வரை மெட்ரோ ரெயிலில் 1.91 கோடி பேர் பயணம்
x
தினத்தந்தி 10 Sept 2019 6:50 PM IST (Updated: 10 Sept 2019 6:50 PM IST)
t-max-icont-min-icon

நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை மெட்ரோ ரெயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:- 

நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை மெட்ரோ ரயிலில் 1.91 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.  ஆகஸ்ட் மாதத்தில் 19 நாட்களில் மட்டும்  நாளொன்றுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story