வேலூரில் வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள் -போலீசார் விசாரணை


வேலூரில் வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள் -போலீசார்  விசாரணை
x
தினத்தந்தி 10 Sept 2019 7:34 PM IST (Updated: 10 Sept 2019 7:34 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டம் கவசம்பட்டு பகுதியில் இரவில் வானத்திலிருந்து விழுந்ததாக கூறப்படும் மர்ம பொருளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவசம்பட்டு பகுதியில் வானத்தில் இருந்து இரவில் மர்மப்பொருள் விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும்  வானத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படும் மர்ம பொருளில் மின் விளக்குகள் எரிந்து கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற கே.வி.குப்பம் போலீசார், மர்ம பொருளை கைப்பற்றி தடயவியல் வல்லுநர்களுடன் சேர்ந்து ஆய்வு  செய்ததில் அது வெடிபொருள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. 

மேலும் வானிலை ஆய்வு சம்பந்தப்பட்ட பொருள் என்று கூறிய காவல்துறையினர், இதனை முழு ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். மேலும் இப்பொருள் எங்கிருந்து அனுப்பப்பட்டது வானில் இருந்து எப்படி விழுந்தது என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story