எந்த கதாபாத்திரம் ஆனாலும் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி - அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம்


எந்த கதாபாத்திரம் ஆனாலும் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி - அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம்
x
தினத்தந்தி 1 Oct 2019 12:00 PM IST (Updated: 1 Oct 2019 12:00 PM IST)
t-max-icont-min-icon

எந்த கதாபாத்திரம் ஆனாலும் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி கணேசன் என்று அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

நடிகர் சிவாஜி கணேசனின் 92-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, வளர்மதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

அதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

எந்த கதாபாத்திரம் ஆனாலும் முத்திரை பதித்தவர் நடிகர் சிவாஜி.  அவரை பற்றி நாள் முழுவதும் பேசி கொண்டிருக்கலாம்.  பார்ப்பவர்களையும் கதாபாத்திரத்தோடு ஒன்றச் செய்யும் ஆற்றல் படைத்தவர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story