விரைவில் சென்னை பெருங்குடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் - முதலமைச்சர் பழனிசாமி
விரைவில் சென்னை பெருங்குடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை கொடுங்கையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-
ரூ.4,078 கோடியில் கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் திட்டம் துவக்கி வைக்கப்பட உள்ளது. 8 நீர் மேலாண்மை அவசியம். பொருளாதார வளர்ச்சிக்கு நீர் மேலாண்மை அவசியம். தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்றார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-
நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படும். 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நீர் 9 நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். விரைவில் சென்னை பெருங்குடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
தமிழகம் வரும் கிருஷ்ணா நதி நீர் வீணாகாமல் தடுக்க கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story