நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணம் - கராத்தே தியாகராஜன்


நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணம் - கராத்தே தியாகராஜன்
x
தினத்தந்தி 1 Oct 2019 8:34 AM GMT (Updated: 1 Oct 2019 8:34 AM GMT)

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணமாக இருக்கும் என கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.

சென்னை,

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பப் போவது ரஜினி தான். ரஜினி இன்னும் 6 மாதத்தில் கட்சி தொடங்குவார்.  2021-ல் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆவார் என்று கூறினார். 
தற்போது திமுக, காங்கிரஸ் கூட்டணி குறித்து மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கராத்தே தியாகராஜன் கூறியதாவது;-

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணமாக இருக்கும். அதே போல் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அதற்கு காங்கிரஸ் தான் காரணம்.  காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சிவாஜிக்கு சிலை அமைக்க வேண்டும் என்றார்.

Next Story