தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் கே.சி.கருப்பணன்


தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் கே.சி.கருப்பணன்
x
தினத்தந்தி 3 Oct 2019 11:55 AM IST (Updated: 3 Oct 2019 11:55 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற பின்  அமைச்சர் கே.சி.கருப்பணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்தாண்டை போலவே இந்தாண்டும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடு கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.  சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அனுமதி தரப்படும், அதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அஜினோமோட்டோவை தடைசெய்வது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story