நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 3 Oct 2019 4:30 PM IST (Updated: 3 Oct 2019 4:30 PM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்ச்செல்வன், தி.மு.க. வேட்பாளராக புகழேந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள். நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நாராயணன், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் ஆகியோர் நிற்கிறார்கள். நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் களம் இறங்கி உள்ளனர்.

இந்த 2 தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்.1 ஆம் தேதி நடைபெற்றது.  வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான நேரம் முடிந்த நிலையில்,   இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 

இதில்,  நாங்குநேரி தொகுதி தேர்தலில் அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் வேட்பாளர்கள் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக உட்பட 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 9 பேர் போட்டியிடுகின்றனர். 

Next Story