3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசிவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த தாய்
சிதம்பரம் அருகே கணவனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனது 3 பெண் குழந்தைகளை வாய்க்காலில் வீசிவிட்டு காவல் நிலையத்தில் தாய் சரணடைந்துள்ளார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சத்யவதி என்ற மனைவியும், அக்சயா, நந்தினி, தர்ஷினி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். மூத்த மகள் அக்சயா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வரும் நிலையில், சிறுகுழந்தைகளான நந்தினி, தர்ஷினி ஆகியோர் தாய் சத்யவதி பராமரிப்பில் வீட்டில் வளர்ந்து வந்தனர்.
மணிகண்டனுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில தினங்களாகவே தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனமுடைந்து தனது 3 மகள்களையும் அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரான மிராளூர் கிராமத்திற்கு சென்றுள்ளார் சத்யவதி.
செல்லும் வழியில் சேத்தியா தோப்பு பகுதியில் இறங்கிய சத்தியவதி அங்குள்ள மானம்பார்த்த வாய்க்காலில் தனது மூத்த மகள் அக்சயாவையும் மற்ற இரண்டு மகள்களையும் ராஜவாய்க்கால் பகுதியில் தூக்கி வீசிவிட்டு காலையில் சேத்தியால் தோப்பு காவல் நிலையத்தில் நடந்ததை கூறி சரணடைந்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அக்சயா மற்றும் நந்தினி ஆகிய இரண்டு குழந்தைகளின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் ஒரு குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் மணிகண்டன், சத்யவதி ஆகிய இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story