இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 18 இலங்கை மீனவர்கள் கைது


இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த 18 இலங்கை மீனவர்கள் கைது
x
தினத்தந்தி 4 Oct 2019 3:59 PM IST (Updated: 4 Oct 2019 3:59 PM IST)
t-max-icont-min-icon

இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஷ்வரம்,

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன் பிடித்த 18 இலங்கை மீனவர்கள் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 8 படகுகள் கைப்பற்றப்பட்டன.

இது குறித்து மீனவ தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் செய்தியாளர்களிடம் பேசியபோது, நேற்று மதியம் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த போது கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 18 மீனவர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 8 படகுகளையும் காரைக்கால் துறைமுகத்திற்கு இந்திய கடலோர காவல் படையினர் இன்று காலை கொண்டு வந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story