நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு - பொன்.ராதாகிருஷ்ணன்
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
அக்டோபர் 21ம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சந்தித்தார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்குமாறு பொன்.ராதாகிருஷ்ணனிடன் அமைச்சர் ஜெயக்குமார் அப்போது கோரிக்கை விடுத்தார்.
அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இதனையடுத்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இந்தச் சந்திப்புக்கு பின் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம். அதிமுக, பாஜக இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை.
பாஜக மாநில தலைவர் இல்லாத காரணத்தினால் அகில இந்திய தலைமையிடம் தான் பேச முடியும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும். அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story