இந்தியாவில் அசுத்தமான ரெயில் நிலையங்கள் பட்டியலில் தமிழகத்தின் 6 ரெயில் நிலையங்கள்
இந்தியாவில் அசுத்தமான ரெயில் நிலையங்கள் பட்டியலில் தமிழகத்தின் 6 ரெயில் நிலையங்கள் இடம் பெற்று உள்ளன.
சென்னை
இந்தியா முழுவதும் உள்ள 720 ரெயில் நிலையங்களில் மேற்கொண்ட ஆய்வின்படி, தூய்மையான ரெயில் நிலையங்களில் முதல் பத்து இடங்களை பிடித்த ரெயில் நிலையங்களை ரெயில்வே அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
இதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் முதலிடத்தையும் ஜோத்பூர் இரண்டாவது இடத்தையும் துர்காபுரா மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து முறையே, அடுத்தடுத்த இடங்களை ஜம்முதாவி, காந்தி நகர், சூரத்கர், விஜயவாடா,உதய்பூர் நகரம், அஜ்மீர், ஹரித்வார் ஆகிய ரெயில் நிலையங்கள் பிடித்துள்ளன. முதல்பத்து இடங்களில் ராஜஸ்தானில் மட்டும் 7 ரெயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாகக் காணப்படும் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தமிழக ரெயில் நிலையங்களே 6 இடங்களைப் பெற்றுள்ளன. சென்னை பெருங்களத்தூர் முதலிடத்தையும், கிண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து முறையே, டெல்லி சடார் பஜார், மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த வேளச்சேரி, கூடுவாஞ்சேரி. சிங்கப்பெருமாள் கோவில், பழவந்தாங்கல் ஆகியவையும் கேரள மாநிலம் ஒட்டப்பாலம், பீகாரை சேர்ந்த அராரியா கோர்ட், உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர்ஜா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.
Related Tags :
Next Story