சென்னை நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து திருடிய ஆந்திர ஆசாமிகள் கைது மீண்டும் அதே கடைக்கு வந்தபோது சிக்கினர்
சென்னை நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து திருடிய ஆந்திர ஆசாமிகள் 2 பேர் மீண்டும் அதே கடைக்கு நேற்று வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகை திருட்டு போனது. கடைக்கு நகை வாங்குவது போல் வந்த 2 ஆசாமிகள், 5 பவுன் நகைகளை நைசாக திருடிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையில் ஆயிரம் விளக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் நகை வாங்குவது போல் நடித்து, ஆசாமிகள் 2 பேர் நகையை நைசாக திருடிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் இருவரையும் போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அதே ஆசாமிகள் இருவரும் நேற்று குறிப்பிட்ட அதே நகைக்கடைக்கு நகை வாங்க வந்தனர். கடை ஊழியர்கள் அவர்களை அடையாளம் கண்டு நைசாக பேச்சு கொடுத்து அவர்களுக்கு குளிர்பானம் வாங்கிக்கொடுத்து உபசரித்து உட்கார வைத்தனர்.
பின்னர் அவர்களுக்கு தெரியாமலேயே ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து கொள்ளை ஆசாமிகள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சைபுல்லா (வயது 50), ஷாக்மவுசான்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story