அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன் - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு
என்றுமே மேதகு ஆளுநர் என்று அழைப்பதைவிட அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் நடந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:-
என் வாழ்க்கையில் என்றுமே முற்றுப்புள்ளி கிடையாது, கமாதான், எனக்கு ஓய்வும் கிடையாது, யாரையும் ஓய்வெடுக்கவும் விட மாட்டேன். என்றுமே மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட அன்பு சகோதரியாகவே இருக்க விரும்புகிறேன்.
தமிழுக்கும் பாலமாக தெலுங்கு இருக்க வேண்டும் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியது வரவேற்கத்தக்க ஒன்று. உழைப்புக்கு மரியாதை கொடுப்பவர்கள் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் தான்.
நான் தெலுங்கானா ஆளுநரானதில் இருந்து அங்கு தமிழ் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு நான் வரும்போதெல்லாம் இங்கு தெலுங்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story