ஆயுத பூஜை விடுமுறை: கடந்த மூன்று நாட்களில் 4.79 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்


ஆயுத பூஜை விடுமுறை: கடந்த மூன்று நாட்களில் 4.79 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்
x
தினத்தந்தி 7 Oct 2019 2:16 PM IST (Updated: 7 Oct 2019 2:16 PM IST)
t-max-icont-min-icon

ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த மூன்று நாட்களில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 250 பேர் சொந்த ஊர் சென்றிருப்பதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பிற மாவட்ட மக்களுக்காக சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு இயக்கப்பட்ட பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் 4 லட்சத்து 79 ஆயிரத்து 250 பேர் சொந்த ஊர் சென்றிருப்பதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று தினங்களில் 8 ஆயிரத்து 490 பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story