கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த விரைந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


கீழடியில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த விரைந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Oct 2019 4:59 PM IST (Updated: 7 Oct 2019 4:59 PM IST)
t-max-icont-min-icon

கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை காட்சிப்படுத்த விரைந்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில்,

கீழடியில் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களை, பெங்களூரு உள்ளிட்ட பிற இடங்களில் இருந்து மீண்டும் கீழடிக்கே கொண்டு வந்து அருங்காட்சியகத்தை விரைந்து அமைத்து, மக்களுக்குக் காட்சிப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Next Story