செவிலியர் பணிக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை நியமிக்க தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு


செவிலியர் பணிக்கு குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களை நியமிக்க தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 7 Oct 2019 7:07 PM IST (Updated: 7 Oct 2019 7:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களை விட குறைவான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

சென்னை,

சென்னையைச் சேர்ந்த செவிலியர் பட்டதாரி திவ்யபாரதி, தகுதி மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற 56 பேரை செவிலியர் பணி நியமனத்திற்கு தற்காலிகமாக தேர்வு வாரியம் தேர்வு செய்துள்ளதாக வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி, குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் பணி நியமன உத்தரவிற்கு தடை விதித்ததோடு, மனுவிற்கு அக்டோபர் 14ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்வு ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Next Story