மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது - சீமான் பேச்சு


மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது - சீமான் பேச்சு
x
தினத்தந்தி 7 Oct 2019 9:00 PM IST (Updated: 8 Oct 2019 12:49 PM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நெல்லை,

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நாங்குநேரியில்  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணனை ஆதரித்து, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- 

மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது. நான் அமைப்பு சரி இல்லை என்கிறேன், சிலர் சிஸ்டம் சரி இல்லை என்கின்றனர்.

பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும். மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள் யாரால் தேர்தல் வருகிறதோ அவரிடமிருந்து தேர்தலுக்கான தொகையை தேர்தல் ஆணையம் பெற வேண்டும். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் நடிகர்களை மக்கள் விரும்புகிறார்கள். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story