தமிழக பாஜக தலைவர் விரைவில் சுமூகமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார் - வானதி சீனிவாசன் பேட்டி
தமிழக பாஜக தலைவர் விரைவில் சுமூகமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தினால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என போலீஸ் அச்சத்தை உருவாக்குகிறது. காவல்துறை தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழக பாஜக தலைவர் விரைவில் சுமூகமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார். உலகத் தலைவர்கள் வரும்போது அவர்களை வரவேற்பதற்காக பாதுகாப்பான முறையில் பேனர்களை வைப்பதில் தவறில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story