சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’
சென்னை நகரில் ‘மெட்ராஸ் ஐ’ எனும் நோய் பரவுகிறது.
சென்னை,
சென்னையில் கடந்த சில நாட்களாக ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் கண்நோய் பரவி வருகிறது. ‘மெட்ராஸ் ஐ’ பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எரிச்சல், நீர்வடிதல் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ‘மெட்ராஸ் ஐ’ இதன் காரணமாக கண்களின் வெள்ளை படலம் சிவப்பு மற்றும் இளம் சிவப்பு நிறத்தில் மாறி விடுகிறது. ‘மெட்ராஸ் ஐ’ பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:
சென்னையில் அடினோ வைரஸ் எனப்படும் ‘மெட்ராஸ் ஐ’ கண் நோய் வேகமாக பரவி வருகிறது. இதனால் கண்கள் சிவப்பு நிறமாக மாறுகிறது. கண் எரிச்சல், நீர்வடிதல், அழுக்கு தேங்குதல் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன.
இந்த வைரஸ் குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், வேலை செய்யும் இடம் என நம்முடன் இருப்பவர்களிடம் இருந்து பரவுகிறது. இதற்கு மருந்து கொடுத்தாலும் கட்டுப்படுத்துவது சிரமம். எனவே பொதுமக்கள் கண்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். சுத்தமான டவல்களை பயன்படுத்த வேண்டும். வேறொருவர் பயன்படுத்திய டவல்களை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story