சேலம் அருகே காருக்குள் காதலனுடன் பிணமாக கிடந்த என்ஜினீயரிங் மாணவி


சேலம் அருகே காருக்குள் காதலனுடன் பிணமாக கிடந்த என்ஜினீயரிங் மாணவி
x
தினத்தந்தி 9 Oct 2019 4:19 PM IST (Updated: 9 Oct 2019 4:19 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே என்ஜினீயரிங் மாணவி காருக்குள் காதலனுடன் பிணமாக கிடந்தார்.

சேலம், 

சேலம் செவ்வாய்ப் பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெள்ளிப்பட்டறை அதிபர் கோபி. இவரது மகன் சுரேஷ்
(வயது 22). தந்தையுடன் வெள்ளி தொழில் செய்து வந்தார்.

நேற்று சுரேஷ் திடீரென மாயமானார். அவரது செல்போனுக்கு  தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர். நள்ளிரவில்  ஜவுளிக்கடை பஸ் டாப் அருகே சுரேஷ் நடத்தி வரும் கார்ஷெட்டுக்கு சென்று தேடினர். 

சுரேசின் மோட்டார் சைக்கிள் கார் செட்டின் முன் பகுதியில் நின்றது. அவரது காரும் கார் ஷெட்டிற்குள் நின்றது. அவர்கள் அங்கு சென்று பார்த்த போது காரின் பின் இருக்கையில் சுரேசும், ஒரு இளம்பெண்ணும் பிணமாக கிடந்தனர். அவர்கள்  அரை நிர்வாணமாக காணப்பட்டனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  சுரேசுடன் பிணமாக கிடந்தது சேலம் குகை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு மாணவி ஜோதிகா (20) என்பது தெரிய வந்தது. 

வெள்ளி பட்டறை அதிபரான சுரேஷ் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர். ஜோதிகாவின் தந்தையும் வெள்ளி தொழில் மற்றும் துணி வியாபாரமும் செய்து வருகிறார்.

3 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் ஜோதிகாவுக்கு செல்போனில்  இருந்து ஒரு காதல் மெசேஜ் அனுப்பி உள்ளார். அதனை அறிந்த ஜோதிகாவின் பெற்றோர் இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதையும் மீறி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர். ஜோதிகா வீட்டில் அவரை வெளியில் செல்லக் கூடாது என்று தடை விதித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள்  அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்து வந்தனர்.  நம்மை வாழவிடாமல் பிரித்து விடுவார்களோ என்று காதல் ஜோடி அஞ்சினர்.

காருக்குள் பெட்ஷீட் விரித்த நிலையில் கிடந்ததாலும், காதல் ஜோடி அரைகுறை ஆடையுடன் கிடந்ததாலும் அவர்கள்  சாவதற்கு முன்பு உல்லாசமாக இருந்ததாகவும், பின்னர் சயணைடு தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காருக்குள் பாதி சாப்பிட்ட நிலையில் சாக்லேட் சிதறி கிடந்ததால் அதற்குள் வைத்து சயனைடு சாப்பிட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Next Story